வியாழன், 19 மே, 2011

சுட்டவர்களைப் புதைக்கும் புதை குழி: புது ஆதாரங்கள் வெளியாகியுள்ளது !



முள்ளிவாய்க்காலில் மே 18ம் தேதி சரணடைந்த பல பொதுமக்களையும், புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் இராணுவம் சுட்டுக் கொண்றது யாவரும் அறிந்ததே. இவர்களில் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் மனைவி மற்றும் பிள்ளைகளும் அடங்குவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாம் சனல் 4 தொலைக்காட்சியில் பார்த்த கொலைகள், நடைபெற்ற இடத்துக்குப் பக்கமாக இக் கொலைகள் நடந்திருக்காலம் எனவும், அங்கே சுட்டுகொல்லப்பட்ட பலரது உடல்களை இராணுவம் உடனே குழி தோண்டி அவ்விடத்திலேயே புதைத்தது எனவும் கூறப்படுகிறது. ஆனல் நீங்கள் இங்கே பார்ப்பது பிறிதொரு உடல்களாகும். இவை பிறிதொரு இடத்தில் சுடப்பட்டு, பின்னர் அவர்கள் உடல்களை டிராக்டர் வண்டியில் ஏற்றிச் செல்கிறது இராணுவம்.

இவர்களின் உடல்கள் பிறிதொரு இடத்தில் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டதாக இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்த சில பெண்புலிகளைக் கொண்ற இராணுவத்தினர், அவர்களின் உடல்களையும் ஏற்றிச் சென்று புதைத்தாக தற்போது செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது எங்கே எவ்வாறு நடந்தது என்பது குறித்த விபரங்கள் தற்போது அதிர்வு இணையத்தால் பெறப்பட்டு, அவை ஆவணப்படுத்தப்படுகிறது. மேலும் கீழ் காணும் புகைப்படத்தில் உள்ள மூவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்து, அவர்களை தமது தற்காலிக முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளது.



மே 18ம் தேதி மாலை சுமார் 5.19 க்கு இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் புகைப்படத்தில் இருக்கும் மூவரும் தற்போது உயிருடன் உள்ளனரா ? இல்லை இவர்கள் யார் என அறிய அதிர்வு இணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. எனவே இப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தெரிந்தால் உடனடியாக எம்மோடு தொடர்புகொள்ளவும்.

இப்படத்தில் உள்ளவர்கள் புலிகளின் தளபதி ராம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனைவி பிள்ளைகளைப் பிடித்த இராணுவம் பின்னர் இவர்களைக் காட்டி தளபதி ராமையும் சரணடையச் செய்தனர் என்று சொல்லப்படுகிறது.

புதுமாத்தளான் பகுதியைக் திடீரென இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே இருந்த தற்காலிக வைத்தியசாலையில் காயப்பட்டு இருந்த பல பெண்களை இராணுவம் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவர்களை கேலிசெய்தும், போத்தியிருந்த ஆடைகளைக் களைந்து அவர்களை மானபங்கப்படுத்தியதாகவும், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழ்தரமான இவ்வேலைகளைச் செய்யும்போது மோபைல் போனில் எடுக்கப்பட சில புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.




லண்டனில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு !

  • 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெறுகின்றது.

    பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

    பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (18-05-2011) பிற்பகல் 6:00 மணிமுதல் பிற்பகல் 8:30 மணிவரை நிகழுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம்பித்திருந்தனர்.

    முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது இழந்த தம் உறவுகளின் திருவுருவப்படத்தோடு அவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் இந்தக் கண்னீரும், அவர்கள் கைகளில் தங்கியுள்ள படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் படங்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் தமிழர்களை மட்டுமன்றி வேற்றினத்தவரையும் கண்கலங்க வைத்தது.

    தமிழர் வரலாற்றில் காலா காலமாக இனவழிப்பு நடைபெற்று வந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதமே மனிதத்தையே நடுங்கவைக்கும் அளவிற்கு சிறுவர், பெரியோர், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடன்றி கொத்துக்கொத்தாக 100,000 க்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டதன் அடையாளமாய் போர் முடிவுற்ற நாளான மே 18 இரத்தம் தோய்ந்த நாளாகவும், ” தமிழர் இனவழிப்பு நினைவுநாள்” ஆகவும் தரணியெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.

    பிரித்தானியத் தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது ஈழவிடுதலைக்கான தமிழர் போராட்டத்தின் வெற்றிக்குரிய முதற்படியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 22 மார்ச், 2011

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.


செவ்வாய், 15 மார்ச், 2011

இலங்கை புலனாய்வு பிரிவில் விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாபா!
விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளரான பாபா இலங்கை புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிவருகிறார் என தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதும் உள்நுழையும் போதும் அவர்களை அடையாளம் காட்டிக் கொடுப்பதே இவரது பணியாகும் என ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது புலிகளுக்கு ஆதரவானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும்போது பாபா அடையாளம் காட்டும்போது கணினி திரையில் சமிஞ்சை காட்டும். அதனைக்கொண்டு குடிவரவு அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குவர்.

கைது செய்யப்படுபவர்களில் இலங்கை கடவுச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஒருவிதமாகவும் வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பவர்களை வேறு விதமாகவும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா கார்டியனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுபவர்களை எங்குகூட்டிச் செல்லப்படுகின்றார்கள் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என குடிவரவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர இறந்தவர்கள் எனக்குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் பேச்சாளர் யோகரட்ணம் யோகி மற்றும் மூத்த உறுப்பினர் வி.பாலகுமார் ஆகியோரும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் விடுதலைப் புலிகளின் பொருளாதாரத்துறை பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி, முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்.பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப் பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிப் பொறுப்பாளர் ஞானம், முன்னாள் பிரதி அரசியல் பொறுப்பாளர் தங்கன் ஆகியோரையும் அரசு புலனாய்வுப் பிரிவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது
அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் (படங்கள் இணைப்பு)
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.


இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.


அட்லாண்டிஸ்

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.

அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.


மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம்.

ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதன், 31 மார்ச், 2010

யுத்தம் முடியவில்லை; அது புதுவடிவம் பெற்றுள்ளது!

நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது.


பச்சைக் கண்களின் பார்வையில் முள்ளிவாய்க்காலில் சிங்கமும் – புலியும் சண்டையிட்டன என்பதுதான் தெரியும். ஆனால் யார் யாரோ நலன்களுக்காகவெல்லாம் வெள்ள முள்ளிவாய்க்கால் இரத்த வாய்க்கால் ஆனது. பச்சைக் கண்களால் பார்க்கும் அரசியற் கண்ணற்றோரின் பார்வையில் யுத்தம் முடிவடைந்து விட்டது எனும் கூற்றே ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் அதன் முழுப் பரிமாணத்துடனான யுத்தம் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது.

இந்து சமுத்திரத்தில் துலாவெனக் காட்சியளிக்கும் இலங்கைத்தீவில் இதுவரை காலமும் நுனித் துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித் துலாவுக்கு மாறியுள்ள இடமாற்றம்தான் யுத்தத்தில் ஏற்பட்டுள்ளது. நிகழ்ந்து முடிந்தது சமர். தொடர்கிறது யுத்தம். அந்த யுத்தம் தனது ஐந்தொகைக் கணக்கை நிறைவு செய்ய இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும். அந்த ஐந்தொகை தமிழருக்கு சாதகமாய் முடியுமென வரலாற்றுப் பதிவேடு கட்டியம் கூறுகிறது.

துறைமுகங்கள், விமானநிலையங்கள், கேந்திரக் கதவுகள் என்பனவற்றை பொருளாதார ஓடைக்குள்ளால் இலங்கைத்தீவில் திறக்க முனைவதன் மூலம் ஒரு புதிய வல்லரசின் எழுச்சி இந்து சமுத்திரத்தில் உதயமாகியுள்ளது. அதனைத் தடுக்க முயலும் வல்லரசுகளுக்கும் எழுச்சிபெறும் வல்லரசுக்கும் இடையிலான போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிங்கம் – புலி வடிவில் அரங்கேறி தமிழரின் இரத்தாறு ஓடியது.

புலிக் கொடியை வீழ்த்துவதன் மூலம் மேற்படி ஆதிக்க அரசுகள் தமது போராட்டத்தை சிங்கக் கொடியின் நிழலில் சமரசம் செய்யலாம் என ஒரு கணக்குப் போட்டன. அப்படி வல்லரசுகளிடையேயான பல வகைத் திரைமறைவுப் போராட்டங்களின் பின் பல சமரசங்கள் அந்த வல்லரசுகளிடையே இடம் பெற்றிருப்பது உண்மைதான். இப்படி ஒரு எண்ணத்தின் பின்னணியில் அரசமைத்துள்ள சிங்கக் கொடியின் நிழலில் சமரசம் காணலாம் என சிங்கக் கொடிக்கு பல வல்லரசுகள் காற்றூதின. புலிக்கொடி சாய்ந்தது சிங்கக் கொடி பறந்தது. ஆனால் சிங்கக் கொடியின் அதிகாரத் துலாக்கோல் இரத்தச் சகதியில் நிலைதடம் மாறி அங்கிங்காய் அலையத் தொடங்கியது. இதனால் முள்ளிவாய்கால் இரத்தாறு யுத்தத்தின் முடிவாய் அன்றி வல்லரசுகளின் நிலையெடுப்பாய் உருமாறியது. இது வரலாற்றின் தவிர்க்க முடியாத விதியென முரண்பாடு பற்றிய வரலாற்றியல் கூறுகிறது.

சிங்கக் கொடி வல்லரசுகளிடையே சமரசத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு பதிலாக அதன் இயல்பான முரண்பாட்டு வளர்ச்சியின் நிமித்தம் சிங்கக் கொடியின் செங்கோல் ஒரு தொகுதி வல்லரசுகளுக்கு எதிரான மறுதொகுதி வல்லரசுகளின் பக்கம் சாயத்தொடங்கியது. தமிழ் மக்களின் மண்டை ஓடுகளை அதிகாரத்திற்கான வாக்குகளாக எண்ணும் படலம் ஆரம்பமானபோது மேற்படி வல்லரசுகளின் நிலையெடுப்புக்கள் திரைக்கு பின்னால் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் வெளிச்சத்தில் திரைக்குப் பின்னால் நின்ற உருவங்கள் அணிதிரள்வது தெரிந்தது.

இனவாதம் தாரை தம்பட்டம் முழங்க மண்டை ஓட்டுச் சிம்மாசனத்தின் மீது ராஜபக்சவுக்கு மீள் முடி தரித்தது. முடிதரிக்கும் சிங்கள மன்னன் முதலில் கடல் கடந்த உலாப் புறப்படுவது இந்தியாவுக்குத்தான். ஆனால் இம்முறை அதற்கு மாறாக மன்னன் ரஷ்சியா சென்று முடிக்குரிய பட்டம் சூடிவந்துள்ளார். இது இந்தியாவில் இருந்து தாம் விலக்கிச் செல்வதாகவும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்வதாகவும் அமைந்த ஓர் அரசியல் ஓலையாகவே உள்ளது.

மன்னனின் கொடி சீனா பக்கம் சாய்கிறதே ஆயினும் முதலாவது உலாவை சீனாவில் ஆரம்பிப்பதன் மூலம் இந்திய அமெரிக்க அரசுகளை ஆத்திரப்படுத்தக் கூடாது என சிங்கள இராஜ தந்திரம் எண்ணியுள்ளது. ஆதலால் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு புறம்பான தனது செயற்பாட்டை கோடி காட்டும் வகையில் தன் திசை மாறும் பயணத்தை ஒரு வகை இடைக் கோட்டுக்குள்ளால் போகக் கூடிய இடைவெளி ரஷ்சியாவுக்கான பயணமாகவே அமைய முடிந்தது. ஏனெனில் ரஷ்சியா இந்தியாவின் பாரம்பரிய நண்பன். அதேவேளை அது திசைமாறலை வெளிப்படுத்தக் கூடிய புள்ளியாகவும் ரஷ்சியாவின் இன்றைய சர்வதேச ஸ்தானம் உள்ளது. இவற்றைக் கவனித்தே உலாவரும் முதல் நாடாய் ரஷ்சியா தேர்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் அரசியல் இராஜதந்திரப் பரிபாசையானது அரசியல் வடுவாய் இந்திய அமெரிக்க அரசுகளின் அடிவயிற்றில் சுடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி வேட்பாளராய் நின்ற சரத் பொன்சேகா இராணுவச் சட்டத்தின் கீழ் நடுநிசியில் கைதுசெய்யப்பட்டதும் மறுநாள் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் பொன்சேகாவின் இல்லம் சென்று அவரின் மனைவிக்கு ஆறுதல் கூறினர் என்பது ஒரு புறமும் சீனத் தூதரகம் தன் இருக்கையில் இருந்தபடி றகனின் கண்களை விழிப்பாக்கிக் கொண்து என்பது மறுபுறமும் நடந்தேறிய மேடை நாடகங்கள் ஆயின. இப்போது திரைக்குப் பின்னால் அன்றி மேடையில் பாத்திரங்கள் உலாவின.

முள்ளிவாய்க்காலில் பறக்கத் தொங்கிய சிங்கக் கொடியின் பட்டொளிக்காக வல்லரசுகள் நிலையெடுக்கத் தொடங்கின. ஆதலால் முள்ளிவாய்க்கால் இரத்தாற்றின் வீச்சு யுத்தத்தின் முடிவாக அன்றி அது ஒரு சமரின் முடிவாய் நின்று வெடிக்கப் போகும் ஒரு பெரும் யுத்ததிற்கான வல்லரசுகளின் நிலையெடுப்பாய் மாறியுள்ளது. களம் முள்ளிவாய்க்காலில் இருந்து இப்போது கொழும்புக்கு மாறியுள்ளது. களமாற்றம் நிகழ்ந்து யுத்தம் மேலும் அளவுமாற்றத்திற்கு போய்விட்டது. இந்நிலையில் நிலையெத்துள்ள வல்லரசுகள் இப்போது முதற்கட்டமாய் குத்துச்சண்டை வீரர்களின் பாணியில் இலக்குகளை அவதானிக்ககின்றன.

அடுத்து அவை அடியெடுப்புகளை மேற்கொள்ளும். அடியெடுப்புக்கள் முன்நோக்கியும் பின்நோக்கியும் பக்கவாட்டுக்கும் இடம்பெற நரம்புகள் புடைப்பேறி செவ்வண்ணம் ஆகும். நரம்புகள் செவ்வண்ணமாய் புடைப்பெடுக்க சில மாதங்கள் தேவைப்படும். செவ்வண்ண நரம்புகள் யுத்தத்திற்கான வீதிப்படம் ஒன்றை வரைந்தெடுக்கும். இவ்வீதிவழியே அடியெடுப்புக்கள் புதுவேகம் பெற்று நெஞ்சோடு நெஞ்சாய் மல்யுத்த வீரர்கள் மோதும் போது கல்லும் கல்லும் உரசி தீப்பற்ற சில ஆண்டுகளாகும்.

தீக்குச்சி உரசலுக்காய் காய்ந்து வரண்ட விறகுக் குவியலென இனவாத வரலாற்றில் தீவு மொறுமொறுத்து இருக்கின்றது. பிராந்திய ரீதியான அனைத்து முரண்பாடுகளும் இன ஒடுக்குமுறை வடிவில் முறுக்கேறியுள்ளன. கருத்தரித்த முரண்பாடுகள் வலியெடுக்கத் தொடங்கிவிட்டன. வரலாறு சமுத்திரம் கொள்ளாத் துரோகங்களை காட்சிப்படுத்தத் தொடங்கிவிட்டது. அரசியல் இப்போது ஒழிவு மறைவற்ற நிர்வாண கோலத்தில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. அது தான் அணிந்திருந்த பண்பாடு, நாகரீகம், ஒழுக்கம், வெட்கம், கௌரவம், தர்மம், நீதி, சட்ட ஒழுங்கு என்ற ஆடை ஆபரணங்கள் என்ற அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு லங்காபுரி அரசியல் நிர்வாண கோலத்தில் நத்தனமாடத் தொடங்கியுள்ளது.

கையில் தீக்குச்சியுடன் அரசியல் நிர்வாண கோலத்தில் நர்த்தனமாடும் லங்கா ராணி தான் வளர்த்தெடுத்த வெடிமருந்துக்கிடங்கின்மீது தீக்குச்சியை வீசுவதற்கான நிலையெடுப்பு உச்சம் பெற சில ஆண்டுகள் ஆகும் என வரலாறு பறையறைகிறது. அப்போது நிகழவல்ல ஊழிப் பெருநடனத்தில் ஈழத்தழிழர்கள் விளக்கேந்தி நிற்பர் என்று இன்னொரு முழக்கத்தையும் பறை முழங்கத் தவறவில்லை.

1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக் கலகம் பற்றிய தனது நூலை நிறைவு செய்கையில் சிங்களவரான அதன் ஆசிரியர் தாஸி வித்தாஸி ஒரு கேள்வியை எழுப்புவதோடு அந் நூலை முடிக்கிறார். அதாவது தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனத்தவரும் ‘பிரியும் நிலைக்கு வந்துவிட்டோமா?’ என்பதே அந்தக் கேள்வியாகும். தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ‘ஆம்’ பிரியப்போகின்றோம் என்ற ஆணையை தெளிவாக வழங்கியுள்ளனர். தமிழ் மக்களும் நாம் பிரிவதுதான் விதியென்று தமது ஆணையையும் அவர்கள் வழங்கியுள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இனப்பகைமையை அகற்றுவதற்கு பதிலாக ஜனாதிபதி இனப்பகைமையை கவசமாக அணிந்து தேர்தல் அரங்கில் காட்சியளித்தார். பகைமையை அகற்றுவதற்கு பதிலாக பகையை அகற்றவல்ல பாதையை அகற்றினார். இனவாத சேற்றை அகற்றுவதற்கு பதிலாக சேறு வெளியேறவல்ல பாதையை அகற்றினார். ஆதலால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கும் இந்த உலகிற்கும் ஒரு செய்தியை தமது வாக்குச் சீட்டு வாயிலாய்க் கூறினார். அதாவது ‘நீங்கள் வேறு, நாங்கள் வேறு’ உங்களுடன் இணைய நாங்கள் மாட்டோம் என்று தமிழரைப் பிரித்து வைப்பதாகவே அவர்களின் ஆணையிருந்தது. தமிழ் மக்களின் ஆணையும் அப்படித்தான்.

பி.ஏச்.பாமர் எனும் பிரித்தானிய பேராசிரியர் ஒருவர் 1961 ஆம் ஆண்டு எழுதிய நூலிற்கு இலங்கை: இரண்டுபட்ட நாடு என்ற தலைப்பையே கொடுத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையாகவே இலங்கை இரண்டுபட்டுத்தான் உள்ளது. Breake up of Sri Lanka என்ற தலைப்பிலான பேராசியர் ஏ.ஜே.வில்சனின் நூலும் (1988) இலங்கை இரண்டுபட்டுவிட்டது என்ற செய்தியையே தெளிவாகச் சொல்லியுள்ளது. அந்த வகையில் தேர்தல் முடிவும் இலங்கை இரண்டுபட்டுள்ளது என்ற ஆணையை தெளிவாகக் காட்டுவதுடன் அதன் காலப்பிரசவத்திற்காக வரலாற்றின் அடி மடி நோகத் தொடங்கிவிட்டது என்பதையே இன்றைய தென் இலங்கை நிலைமைகள் கோடி காட்டத் தொடங்கியுள்ளன.

நுனித்துலாவில் எரிந்த பந்தம் முள்ளிவாய்க்காலில் எழுந்த விசையால் அடித்துலாவிற்கு மாறியுள்ளது. தீப்பற்றியுள்ள அடித்துலா சமுத்திரம் தழுவிய வல்லரச போட்டியின் விளைவாய் அது நடு நெம்புகோலுடன் இரண்டாய் உடையும் நாள் ஒன்று வரும். அடித்துலா நுனித் துலா என வல்லரசுகள் அணிவகுப்பர். யார் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இதுவே வரலாற்று அகராதி சொல்லி வைக்கும் அரசியல் அர்த்தமாகும்.

மாண்டுபோன எம்மக்களின் பெயரால் மூளையால் சிந்தித்து இதயத்தால் முடிவெடுப்போம். வரலாறு எம்பக்கம் நாளை விடியும். விடியுமளவும் கையில் விளக்கெடுப்போம். சூரியன் உதிப்பதை யார் தடுப்பர்?

வெடிப்பை மேலெழுந்தவாரியாய்ப் பார்ப்போர் அதைப் பூசிமெழுகிவிடலாமென நினைக்கின்றனர். ஆனால் அத்திவாரமே தளர்ந்துள்ளதென்பதால் இனியும் பூசிமெழுக எடுக்கும் எந்த முயற்சியும் பயனளிக்க போவதில்லை. தீவு இரு பாளங்களாய் பிளவுபட்டுள்ளது என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உச்சியில் அடித்தாற்போல் பறையறைந்திருக்கின்றன. ‘தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே இட்டு நிரப்பிட முடியாத அதாள பாதள பிளவு இருக்கின்றது’ என்று இலங்கைக்கான இந்தியாவின் உயர்தானிகராய் இருந்தவரான திரு.ஜே.என்.டிக்சிற் ’Assignment Colombo’ என்ற நூலில் எழுதியுள்ளவையும் இங்கு நினைவில் நிறுத்தத்தக்கவை.

இலங்கைத்தீவில் மையங்கொண்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு முரண்பாடுகள் அவைகளுக்கிடையே ஏற்படக்கூடிய அமுக்க விசைகளும் இலங்கைத் துலாவை அதன் நடுநெம்புகோலுடன் முறிக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. இதைத்தான் இலங்கையின் அரசியல் கருத்தரித்திருக்கிறது. தமிழர்களிடம் சிந்த இனியும் இரத்தம் இல்லை. ஆனால் மேற்படி கருக்கொண்டுள்ள முரண்பாடுகளை சரிவரக் கையாண்டால் தமிழரை ஒரு துளி இரத்தமும் சிந்தவிடாது வரலாறு அவர்களுக்கு விடிவெள்ளியைக் காட்சியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தாயகன்.

செவ்வாய், 30 மார்ச், 2010

சாவகச்சேரியில் கொலைசெய்யப் பட்ட மாணவனின் வீட்டுக்கு கொலை மிரட்டல்

சாவகச்சேரியில் கடத்தப்பட்டு கப்பம் கோரி கொலைசெய்யப்பட்ட மணவனின் வீட்டுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 13 நாட்களுக்கு முன்னர் கடத்திமாணவனைக் கொலை செய்தது யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல்யமான அரசியல் கட்சி உறுப்பினர்கள் என நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டு சில உறுப்பிணர்களுக்குப் பிடியானையும் வழங்கப்பட்டடுள்ளது. இந்நிலையில் நேற்று கொலை செய்யப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற சிலர் மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர வேண்டாம் என கொலைமிரட்டல் விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது “தமிழீழம்” என்ற கொள்கையும்“பிரபாகரன்” என்ற நாமமுமே!


ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே “சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு” என்பதாகும். மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம்.




தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் பாதைக்கூடாக நகர்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே தமிழீழம் என்ற கொள்கையும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழ்மக்களை எப்போதும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது.

கட்டுரையின் நோக்கத்திற்காக சற்று பின்நோக்கிச் சென்று வரலாற்றை சுருக்கமாக மீளப் பார்ப்போம். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக்கட்சியினால் “சமஷ்டி” முறைமைக்குள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிந்தைய காலங்களில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க பல ஒப்பந்தங்கள்; சிங்கள அரசாங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டாலும் அவை சிங்கள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன அல்லது கிழித்தெறியப்பட்டன.

மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல்பரி அரசியல் யாப்பின் 29வது அரசியல் சட்டத்தின் சிறுபிரிவான “சிறுபான்மை இனங்களிற்கு பாதகமான முடிவு எடுக்கப்படாது” என்ற சிறுபாதுகாப்புச்சரத்தும் 1972ம் ஆண்டு அவ் அரசியல் யாப்பை சிங்களப்பேரினவாதம் தூக்கியெறிந்த போது முடிவிற்கு வந்தது. அதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் முக்கிய அரசியல் சரத்துக்களான – இலங்கை என்ற பெயர் சிறிலங்கா என்று பெயர் மாற்றப்பட்டதுடன், சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி, கல்வியில் தரப்படுத்தல் போன்ற அரசியல்யாப்புச் சரத்துக்கள் சிறுபான்மையினங்களின் தேசியக்கோட்பாடு மற்றும் அரசியல் சாசன
உரிமைகள் தொடர்பில் எந்தவித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இச்சம்பவம் இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை தமிழ்மக்களிற்கு உணர்த்தி நின்றது.

எனவே தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் தமக்கான அரசியல் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தீர்மானமே “சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு” அமைப்பது என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடைவதற்கான ஆரம்ப செயல் திட்டங்களான “அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி தமிழ்த்தேசத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்குதல்” மற்றும் “தனியரசு நோக்கிய சாத்வீக போராட்டங்களை நடத்துதல்”; என எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்து காலங்கடத்தினர். அத்தீர்மானத்தை நோக்கிய முனைப்பை தீவிரப்படுத்தாமல் அன்றைய தமிழ்த்தலைவர்கள்; தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக தனியரசுத் தீர்மானத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்.

மேலும் தனியரசே தமிழ்மக்களிற்கான அரசியல் அடைவு என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஆகும். அதை அடைவதற்காக சாத்வீக வழியில் போராடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், தங்களின் அரசியல் இருப்பிற்காகவே செயன்முறையற்ற வழியில் நடந்தனர். அந்நிலையில் தமிழ்மக்களின் அரசியல் ஆணையை நிறைவேற்ற பல விடுதலை இயக்கங்கள் உருவாகி செயற்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சரியான
பாதையில் தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திச்சென்றது என்று கூறுவது பொருத்தமானது. அதற்கான தலைமையை வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களின்
காலத்திலேயே ஆயுதப்போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒருமுனைப்பில் இலக்கு நோக்கி நகர்ந்தது. விடுதலைப்போருக்காக வீரத்துடன் போராடி 30,000 க்கும் மேற்பட்ட போராளிகள் அளப்பரிய தியாகங்களை செய்து மண்ணுக்காக விதைகுழிக்குள் உறங்குகின்றனர்.

குறிப்பாக “நாம் இரந்து கேட்கும் சமூகமாக இருக்கும் வரை எமது அரசியல் உரிமைப்போராட்ட நியாயம் யாருக்கும் எடுபடாது எனவே ஆயுதப்போராட்டத்தை முனைப்புப்படுத்தும் போது சிங்களப்பேரினவாதிகளும, சர்வதேச நாடுகளும், எமக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள்? அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்” என்ற தலைவர்
அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல்
அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்;வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி! நிரந்தர அரசியல் தீர்விற்கானதாக இருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் நேரடி, மறைமுக உதவியுடன் பின்னடைவு அடைந்த நிலையில் தற்போதைய காலகட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு கடினமான காலமாக இருக்கின்றது. என்றாலும,; தமிழ்மக்களின் போராட்ட நியாயங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விடயமாகவும் தமிழ்மக்களின் மனங்களின் விடுதலையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றது. எனவே தமிழ்மக்களிற்கான தற்போதைய அரசியல் தலைமைகள் காத்திரமான பங்கை வழங்கி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி மக்களை நகர்த்த வேண்டியது அவர்களுக்குரிய முதற்கடமை.

முக்கியமாக பெரும்பான்மை தமிழ்மக்களின் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பதில் தமிழ்மக்களிற்கு மாற்றுக்கருத்து என்றுமிருக்க முடியாது. அதற்காகவே 30,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தினுடாகவே தமிழ்மக்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயங்கள் வலுப்பெற்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான எந்தத் தீர்மானங்களும் கருத்துக்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்ற கோட்பாட்டை கைவிடாமல் அந்த இலக்கை அடையக்கூடிய வகையிலேயே தீர்;வுத்திட்டங்களாக இருந்தாலும் அரசியல் நகர்வுகளாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.

தற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான தீர்மானங்களையும், அரசியல் நகர்வையும், சரிவர எடுத்து அடுத்த சந்ததியினருக்கு, விடுதலைத் தீர்மானத்தை சிறிதும் மாறாமல் பெற்றுக்கொடுப்பதோ அன்றி பொறுப்புக்கொடுப்பதாகவோ இருக்கலாமேயன்றி அந்த கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை என்ற கருத்துக்களை விதைப்பதோ அல்ல. தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களும் மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள் (ஒரு வகையில் போராளிகள் என்றும் சொல்லலாம்). இன்றும் அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் இலக்கு தொடர்பில் மாறுபாடில்லாத கருத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.

தாயகத்தில் நடைமுறை அரசு ஒன்றை நிறுவி, 19 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடாத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் இயங்குதளத்தில் செயற்பட முடியாத தற்சமயத்தில் தனது பிரதேசத்திற்கு வெளியே மக்களின் அரசியல் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் வலியுறுத்தியும் மக்களை ஒருங்கிணைத்தும் செயற்பாடுகளை
முன்னெடுக்கும் ஒரு நோக்கத்துடன் விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு அமைக்கப்படுவதற்கான எண்ணக்கரு நிலையில் இருப்பது “நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” ஆகும். இவ் அரசாங்கமானது தமிழ்மக்களின் அரசியல் கோட்பாட்டை எந்த மாற்றமுமின்றி கடைப்பிடிக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர்.

அவர்களினது தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்;தில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத்தனியரசு என்ற தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பானது, கோட்பாட்டிற்கான ஆதரவை மீளவலுப்படுத்தி நிற்கின்றது. மேலும் தற்போதைய இளம் சந்ததிக்கு முன்னோர்களின் அரசியல் விடுதலை எண்ணம், ஏக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் அரசியல் விடுதலைக் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாட்டையும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது.

தமிழ்மக்களின் தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமையுள்ள தனியரசு என்ற அரசியல் கோட்பாட்டை இலக்காக வைத்து தங்களின் அரசியல் சாணக்கியத்தால் அடையக்கூடிய அரசியல் தீர்வுகளை அடைய வேண்டுமே தவிர அடிப்படைக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செயற்படுவார்களானால் அது தமிழ்மக்களிற்கு இழைக்கும் மிகப்பெரும் அரசியல் தவறாகும். அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட அரசியல் வரலாற்றில் அம்மக்கள் கடந்தகாலங்களில் ஏமாற்றப்பட்ட சம்பவங்களை நேரடியாகவும் முழுமையாகவும் அறிந்தவர் தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றியிருக்கும் மூத்த அரசியல் தலைவரான திரு சம்பந்தர் அவர்கள். அடிப்படைக் கொள்கையிலிருந்து வழுவாது அதை அடையக்கூடிய சரியான பாதையில் மெதுவாக நகர்த்துவதே அவரின் அரசியல் முதிர்சியின் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் இணை அமைப்புக்களும் சரியான முறையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான் செயற்பாடுகளை ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டு, கருத்து பேதங்களை விடுத்து, சிறப்பாக செயற்பட வேண்டும் என தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கின்றது. முக்கியமாக இவ் இரு தளத்திலுள்ள இரு அமைப்புகளும் சரியான தொடர்பாடலுடன் சரியான திட்டங்களை வகுத்து இரு தண்டவாளங்களில் செல்லும் ஒரு புகைவண்டியைப்போல தமிழ்மக்களின் அரசியல் விடுதலை இலட்சியத்தை நகர்த்தவேண்டும்.

தற்போதைய சூழலைப்பொறுத்தவரையில் தலைவர் சுதுமலைப்பிரகடனத்தில் தெரிவித்ததைப் போன்று “போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது” என்ற தத்துவ வரிகளிற்கு அமைவாக தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டு எழும் காலம் வரும் வரை, சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் சூழல்களை வெல்ல ஜனநாயக, அரசியல், ராஜதந்திர வழிகளினூடாக தமிழர்களின் இலட்சியம் நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்.

இது தலைமுறைக்கான போராட்டம். இளம் தலைமுறைக்கு விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, அரசியல் கருத்தூட்டல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைகளிற்கு போராட்ட உணர்வுகள் மருவாது பாதுகாக்க வேண்டும். அதேவேளை ஒன்றுபட்டிருக்கும் அவர்களது உணர்வுகளும் ஆதரவும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு தேசவிடுதலை நோக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.

இஸ்ரேலிய மக்கள் தமது தாயகவிடுதலையை வென்றெடுக்க புலம்பெயர் தேசங்களில் இருந்த ய+தர்களை ஒன்றிணைத்து போராடி வென்ற சம்பவத்தை கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற விடுதலை வரலாற்றைப்போல, தமிழ்மக்களின் விடுதலைக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து “ஈழவிடுதலை நோக்கிய பயணம்” அவசியமாகும் காலம் வரலாம் என கருதாமலும் இருந்து விட முடியாது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விடுதலைக்காக தியாகம் செய்யக்கூடிய மக்கள் சமூகத்தை கட்டி வளர்த்தெடுப்பது இப்பணிகளை முன்னெடுப்போரின் முதன்மையான கடமையாகும்.

“இறைமையுள்ள தனியரசு” என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும்.
Jalavan.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

அந்த இறுதி நாளில் எமது தளபதிகளுக்கும் நான்காம் கட்ட ஈழப் போருக்கும் நடந்தது என்ன?

குருதிச்சுவடுகளில் பாதம் பதித்தபடி” என அக்கடிதத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் நிறைவு வரிகளை மீண்டும் நினைவுபடுத்துதல் அர்த்தமுடைத்தது.

“கொண்ட இலட்சியம்
குன்றிடாதெங்களின்
கொள்கை வீரரின் காலடி மண்ணிலே
நின்று கொண்டொரு
போர்க்கொடி தூக்குவோம்
நிச்சயம் தமிழீழம் காணுவோம்”


இதோ மே-17 கடைசி நாள் கடந்து மேலும் ஒரு நாள் களத்திலே நின்று உண்மையானதோர்புறநானூற்று வீரனின் கடிதப் பதிவு காலம் கடந்த கண்ணீர் வரலாறாய் இங்குவிரிகிறது:

எமது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட “இரத்தக் குளியல்’ நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை.

அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள். நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள். பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டுஉயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய லட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள்மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவிற்கும்நடுவில் “கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம்’ என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல்தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணை சண்டைக்களத்தில் விழுப்புண்அடைந்தபோது, தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள்சீலன் அண்ணை மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

விமானகுண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சுயாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடிமடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும் ரட்ணம்மாஸ்டரின் கரும்புலி அணிகள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின. மே 15 அன்று ஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணை தனது உடலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண்முன்னாலேயே “கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சய னைட் குப்பிகளையும் கடித்துகண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணை கேட்டுக்கொண்டபடி, அவரின்திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடாதென்ற அவரின் விருப்பத்தைநிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணையிடம் சென்றபோது ஐ.நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசண்ணையையும்,புலித்தேவனையும் அறிவுறுத்தியதின்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின் தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

நடேசன், புலித்தேவன் அண்ணையர்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைகாக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலையில் தலைவரைக்காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசரமாற்றங்கள் செய்யப் பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத்தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும் இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறி செய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறிய ராணுவத்தினருக்கும் தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது டிவிஷனது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணிமுறியடித்து பலநூறு ராணுவத்தினரை கொன்றழித்தது.

அதேநேரத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது டிவிஷன்ராணுவத்தினருக்கு தளபதி விடுதலையின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்கள ராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீது திருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படுத்துப்படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணைக்குத் தொடர்பெடுத்து இதனைக்கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது “அதைப்பற்றிகவலைப்படாதீர்கள்” என்றார்.

மக்கள் இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மை ராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது சூசையண்ணைக்கு மீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன்னேன். அதற்கு சூசையண்ணை, “நான்ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ” என்றார். “ஜக்கத்’ என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும்மரபு. அத்தோடு சூசையண்ணையோடான தொடர்பு அறுந்தது.

சூசையண்ணை இருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர் இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ஆயுதங்களும் இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங்கள் சூசையண்ணை கடற்புலிகள் பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடி உறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின்அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள் இவற்றினூடே தவண்டு தவண்டு எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவினோம். மே 17 மாலை 7 மணி அளவில் ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம். எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்புகளையும் துண்டித்தோம். இறந்துகிடந்த ராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம். அவர்களின் நிலைகள், காவலரண்களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலான ராணுவத்தினரை அழித்தது.

குடிக்கத் தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையை சாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய்உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும் ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

உண்டியலடிச்சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்கு ஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை எழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது டிவிஷனுக்கும் 58-வது டிவிஷனுக்கும்இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டிருந்தபோது நாங்கள் நந்திக்கடல்பக்கமாய் நகர்ந்தோம்.

எமது ஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால்பகுதிக்கு நகர்ந்து அங்கும் இரு ராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம். எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேலான ராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

மே18 நண்பகல் 12 மணியளவில் அதே ராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கிநகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொரு ராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டைதொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியைகடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்று ராணுவத்தினர் சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வருமென்பதால் மூவரையும் சுட்டோம். அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோது எங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது. தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன். முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால் மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில்லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில். அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

ஆனால் ஒன்று: சுமார் 38000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர் முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடி ஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் – என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.

வியாழன், 8 அக்டோபர், 2009

மீண்டும் எழுவோம்

ePupopT Neha;f;fhd rpfpr;ir

njhd;kuhl;rp gyNehf;F $l;LwTr; rq;fj;jpd; ifjbf; fpisapy; yad;];gofj;jpd; MjuTld; ePupopT Neha;f;fhd rpfpr;ir fle;j rdpf;fpoik Muk;gpf;fg;gl;Ls;sJ.

,q;Nf r%f itj;jpa mjpfhup jpUkjp M. tp[aFkhk; jiyikapy; ePupopT Neha;f;fhd rpfpr;ir toq;fg;gl;L tUfpwJ. ,q;Nf FUjp> rpWePu; vd;gd gupNrhjpf;fg;gl;L tUtJld; Neahsh;fspd; cauk;> epiw gupNrhjpf;fg;gl;L MNyhrid toq;fg;gl;LtUfpwJ. MNyhrid toq;Fgth;fshf jpUkjp rp. gQ;ruh}[h> jpUkjp j.jpyPgd; MfpNahUld; ifjb rpj;jkUj;Jtj;Jiw khzth;fSk; flik Mw;wptUfpwhh;fs;. ,k; kUj;Jt rpfpr;irahdJ rdpf;fpoikNjhWk; 8kzp njhlf;fk; 12.30 tiu eilngWfpd;wJ..