| இலங்கை புலனாய்வு பிரிவில் விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாபா! |
| விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளரான பாபா இலங்கை புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிவருகிறார் என தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதும் உள்நுழையும் போதும் அவர்களை அடையாளம் காட்டிக் கொடுப்பதே இவரது பணியாகும் என ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது புலிகளுக்கு ஆதரவானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும்போது பாபா அடையாளம் காட்டும்போது கணினி திரையில் சமிஞ்சை காட்டும். அதனைக்கொண்டு குடிவரவு அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குவர். கைது செய்யப்படுபவர்களில் இலங்கை கடவுச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஒருவிதமாகவும் வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பவர்களை வேறு விதமாகவும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா கார்டியனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்படுபவர்களை எங்குகூட்டிச் செல்லப்படுகின்றார்கள் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என குடிவரவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர இறந்தவர்கள் எனக்குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் பேச்சாளர் யோகரட்ணம் யோகி மற்றும் மூத்த உறுப்பினர் வி.பாலகுமார் ஆகியோரும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் விடுதலைப் புலிகளின் பொருளாதாரத்துறை பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி, முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்.பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப் பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிப் பொறுப்பாளர் ஞானம், முன்னாள் பிரதி அரசியல் பொறுப்பாளர் தங்கன் ஆகியோரையும் அரசு புலனாய்வுப் பிரிவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது |
செவ்வாய், 15 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக