முள்ளிவாய்க்காலில் மே 18ம் தேதி சரணடைந்த பல பொதுமக்களையும், புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் இராணுவம் சுட்டுக் கொண்றது யாவரும் அறிந்ததே. இவர்களில் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் மனைவி மற்றும் பிள்ளைகளும் அடங்குவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாம் சனல் 4 தொலைக்காட்சியில் பார்த்த கொலைகள், நடைபெற்ற இடத்துக்குப் பக்கமாக இக் கொலைகள் நடந்திருக்காலம் எனவும், அங்கே சுட்டுகொல்லப்பட்ட பலரது உடல்களை இராணுவம் உடனே குழி தோண்டி அவ்விடத்திலேயே புதைத்தது எனவும் கூறப்படுகிறது. ஆனல் நீங்கள் இங்கே பார்ப்பது பிறிதொரு உடல்களாகும். இவை பிறிதொரு இடத்தில் சுடப்பட்டு, பின்னர் அவர்கள் உடல்களை டிராக்டர் வண்டியில் ஏற்றிச் செல்கிறது இராணுவம்.
இவர்களின் உடல்கள் பிறிதொரு இடத்தில் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டதாக இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்த சில பெண்புலிகளைக் கொண்ற இராணுவத்தினர், அவர்களின் உடல்களையும் ஏற்றிச் சென்று புதைத்தாக தற்போது செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது எங்கே எவ்வாறு நடந்தது என்பது குறித்த விபரங்கள் தற்போது அதிர்வு இணையத்தால் பெறப்பட்டு, அவை ஆவணப்படுத்தப்படுகிறது. மேலும் கீழ் காணும் புகைப்படத்தில் உள்ள மூவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்து, அவர்களை தமது தற்காலிக முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளது.
மே 18ம் தேதி மாலை சுமார் 5.19 க்கு இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் புகைப்படத்தில் இருக்கும் மூவரும் தற்போது உயிருடன் உள்ளனரா ? இல்லை இவர்கள் யார் என அறிய அதிர்வு இணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. எனவே இப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தெரிந்தால் உடனடியாக எம்மோடு தொடர்புகொள்ளவும்.
இப்படத்தில் உள்ளவர்கள் புலிகளின் தளபதி ராம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனைவி பிள்ளைகளைப் பிடித்த இராணுவம் பின்னர் இவர்களைக் காட்டி தளபதி ராமையும் சரணடையச் செய்தனர் என்று சொல்லப்படுகிறது.
புதுமாத்தளான் பகுதியைக் திடீரென இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே இருந்த தற்காலிக வைத்தியசாலையில் காயப்பட்டு இருந்த பல பெண்களை இராணுவம் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவர்களை கேலிசெய்தும், போத்தியிருந்த ஆடைகளைக் களைந்து அவர்களை மானபங்கப்படுத்தியதாகவும், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழ்தரமான இவ்வேலைகளைச் செய்யும்போது மோபைல் போனில் எடுக்கப்பட சில புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
வியாழன், 19 மே, 2011
சுட்டவர்களைப் புதைக்கும் புதை குழி: புது ஆதாரங்கள் வெளியாகியுள்ளது !
லண்டனில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு !
- 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெறுகின்றது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (18-05-2011) பிற்பகல் 6:00 மணிமுதல் பிற்பகல் 8:30 மணிவரை நிகழுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம்பித்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது இழந்த தம் உறவுகளின் திருவுருவப்படத்தோடு அவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் இந்தக் கண்னீரும், அவர்கள் கைகளில் தங்கியுள்ள படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் படங்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் தமிழர்களை மட்டுமன்றி வேற்றினத்தவரையும் கண்கலங்க வைத்தது.
தமிழர் வரலாற்றில் காலா காலமாக இனவழிப்பு நடைபெற்று வந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதமே மனிதத்தையே நடுங்கவைக்கும் அளவிற்கு சிறுவர், பெரியோர், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடன்றி கொத்துக்கொத்தாக 100,000 க்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டதன் அடையாளமாய் போர் முடிவுற்ற நாளான மே 18 இரத்தம் தோய்ந்த நாளாகவும், ” தமிழர் இனவழிப்பு நினைவுநாள்” ஆகவும் தரணியெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.
பிரித்தானியத் தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது ஈழவிடுதலைக்கான தமிழர் போராட்டத்தின் வெற்றிக்குரிய முதற்படியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 22 மார்ச், 2011
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
செவ்வாய், 15 மார்ச், 2011
| இலங்கை புலனாய்வு பிரிவில் விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாபா! |
| விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளரான பாபா இலங்கை புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிவருகிறார் என தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதும் உள்நுழையும் போதும் அவர்களை அடையாளம் காட்டிக் கொடுப்பதே இவரது பணியாகும் என ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது புலிகளுக்கு ஆதரவானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும்போது பாபா அடையாளம் காட்டும்போது கணினி திரையில் சமிஞ்சை காட்டும். அதனைக்கொண்டு குடிவரவு அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குவர். கைது செய்யப்படுபவர்களில் இலங்கை கடவுச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஒருவிதமாகவும் வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பவர்களை வேறு விதமாகவும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா கார்டியனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்படுபவர்களை எங்குகூட்டிச் செல்லப்படுகின்றார்கள் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என குடிவரவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர இறந்தவர்கள் எனக்குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் பேச்சாளர் யோகரட்ணம் யோகி மற்றும் மூத்த உறுப்பினர் வி.பாலகுமார் ஆகியோரும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் விடுதலைப் புலிகளின் பொருளாதாரத்துறை பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி, முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்.பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப் பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிப் பொறுப்பாளர் ஞானம், முன்னாள் பிரதி அரசியல் பொறுப்பாளர் தங்கன் ஆகியோரையும் அரசு புலனாய்வுப் பிரிவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது |
| அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் (படங்கள் இணைப்பு) |
| பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார். அட்லாண்டிஸ் கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர். மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். |